SDPI கட்சியின் 12 ஆவது ஆண்டு துவக்க விழா

0
36

SDPI கட்சியின் 12 ஆவது ஆண்டு துவக்க விழா கொடியேற்று நிகழ்ச்சி கோவை வடக்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பான நிகழ்வில் மாநில செயற்குழு உறுப்பினர் AS.ஷபீக் அஹம்மது அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். கோவை வடக்கு மாவட்ட தலைவர் ME.அப்துல் ஹக்கீம் அவர்கள் கொடியேற்றினார்கள்.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக SDTUவின் மாநில செயற்குழு உறுப்பினர் A.முஹம்மது அலி அவர்கள் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயலாளர் A.காஜா மைதீன் மற்றும் நகர செயலாளர்S.சையது அபுத்தாஹீர் மற்றும் நகர மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நகர செயற்குழு உறுப்பினர்கள், கிளை நிர்வாகிகள்,கிளை செயல்வீரர்கள் என அனைவரும் கலந்து கொண்டு சமூக இடைவெளியோடு இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இறுதியாக SDPIகட்சியின் கோவை வடக்கு மாவட்ட பொருளாளர் S.இஸ்மாயில் அவர்கள் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

இதனை தொடர்ந்து மேட்டுப்பாளையம் நகரம் முழுவதும் கொரோனா நோயிலிருந்து பாதுகாக்க, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் கபசுரக் குடிநீர் மேட்டுப்பாளையம் நகரம் முழுவதும் மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கிளை வாரியாக மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.