8 ஆண்டுகளாக கட்டிமுடிக்கபட்ட பள்ளிகூடத்தை திறக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது இதனை போர்கால அடிப்படையில் விரைவாக பள்ளியை திறக்க திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் மாவட்டகல்வித்துறை வலியுறுத்தி
தமிழ்நாடு மக்கள் நலன்காக்கும் இயக்கத்தின் மாநில செயலாளார் M.மகாராஜன் வலியுறத்தல்.

0
48

8 ஆண்டுகளாக கட்டிமுடிக்கபட்ட பள்ளிகூடத்தை திறக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது இதனை போர்கால அடிப்படையில் விரைவாக பள்ளியை திறக்க திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் மாவட்டகல்வித்துறை வலியுறுத்தி
தமிழ்நாடு மக்கள் நலன்காக்கும் இயக்கத்தின் மாநில செயலாளார் M.மகாராஜன் வலியுறத்தல்

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட
பெரியகண்ணாலப்பட்டி
ஊராட்சிப் பகுதியிலுள்ள. சின்னக ண்ணாலாப்பட்டி கிராமத்தில் கடந்த (2012,2013)ஆம் ஆண்டில் மக்களை உறுப்பினரால் தொகுதி மேம்பாட்டு நிதீயில் இருந்து ஒதுக்கிய ₹4 :20)லட்சம் கட்டபட்ட து
கடந்து 8ஆண்டுகளை கடந்தும் இதுவரை பள்ளி திறக்காமல் கிடப்பில் போடபட்டுள்ளது இந்த பகுதி மாணவர்கள் பெற்றோர்களை மிகுந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது

சின்னகண்ணாப்பட்டி கிராமத்தில் ஒட்டுக்கூரையின் கீழ் தொடக்கப்பள்ளி நடைபெற்ற வருகிறது
சுமார் 50 மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள் மேலும் ஆசிரியர்கள் உள்பட அனைவரும் பணியாற்று வருகிறார்கள்

இந்த பள்ளிகூடத்தை சுற்றியுள்ள பகுதி வீடுகள் அமைந்த பகுதி என்பதால் மாணவர்கள் விளையாட முடியாமல் இருப்பதாலும்
பள்ளிக்கூடம் பழுதுடைந்த நிலையில் தொடர்ந்து கோரிக்கையை அப்பகுதி மக்கள் கோரிக்கை அளித்ததால் காரணாத்தல் கடந்த 2013 ஆம்ஆண்டு பள்ளிகட்டி முடிக்கபட்டு நிலையில் சுமார் 8 ஆண்டுகளாக கடந்தும் பள்ளியை திறக்க பள்ளிகல்வித்துறை மற்றும் மாவட்டநிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில் தொய்வு நிலை எற்பட்டுள்ளது

தற்போது கட்டிய பள்ளிக்கூட கட்டத்தில் இரவு நேரங்களில் மதுபான பிரியர்கள் குடிக்கும் இடமாக மாறிவிட்டது மேலும் குடித்துவிட்டு பள்ளி வளாகத்தில் மது பாட்டிலை உடைந்து சிதறி கிடக்கும் இடமாக மாறிவிட்டது என்றால் மிகையாகது

இந்நிலையில் இந்த பள்ளிசம்பந்தமாக செய்தித்தாளில் வெளியான செய்தி காரணாத்தல் வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்துவிட்டு பள்ளிகூடத்தை திறக்க தேவையான நடவடிக்கை எடுப்பதாகவும் மேலும் பள்ளிகூடத்தை சுற்றியும் சுற்றுசுவர் அமைக்க மகாத்மா காந்தி ஊரக வேலைதிட்டத்தில் கீழ் சுவர் அமைக்க திருப்பத்தூர் மாவட்டஆட்சியருக்கு பரிந்துரை செய்வதாகவும கடிதம் அனுப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானது

இத்துணை முயற்சிகளை எடுத்தும் எவ்விதமான முன்னேற்றமும் இன்றி 8ஆண்டுகளை கடந்தும்
பள்ளி திறக்காமல் உள்ளது மிகுந்த கவலையில் சின்னகண்ணாபட்டி கிராமத்திலுள்ள பெற்றோர்கள் மாணவர்கள் உள்ளார்கள் ஒவ்வொரு தனிமனிதன் அடிப்படை உரிமை அவனின் கல்வியை உறுதி செய்வது அரசின்கடமையாகும் கிராமத்து மாணவர்கள் பள்ளியில் பயிலுவது எத்துணை சிரமங்களை எதிர்கொள்வது அவர்களுக்கு சவாலாக உள்ளது என்பதை சின்னகண்ணாபட்டி கிராமத்து நிகழ்வு காட்டுகிறது
இயக்கத்தின் சார்பாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் மாவட்ட கல்வித்துறைக்கு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து பள்ளியை திறக்க நடவடிக்கை உடனடியாக. தொடக்க வேண்டுமெனவும்
பொதுமக்கள் மற்றும்
இயக்கத்தின் சார்பாக
வலியுறுத்துகிறோம்