சீன தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது என தெரிந்தும் பாஜக அரசு தூங்கிக்கொண்டுள்ளது – ராகுல் காந்தி ஆவேசம்

0
7

லடக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். 70-க்கும் மேற்படடோர் காயமடைந்தனர். சீனாவின் இந்த அத்துமீறலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்ளும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்..!


எல்லையில் என்ன நடந்துக்கொண்டுருக்கிறது.? இந்தியப் பகுதியை எந்த அளவுக்கு சீனா ஆக்கிரமித்துள்ளது. அதை மீட்கவும், இந்திய வீரர்களை பாதுகாக்கவும் எந்தவிதமான திட்டத்தை மத்திய பாஜக அரசு வகுத்துள்ளது என்பன உள்ளிட்ட விவரங்களை நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி தெரிவிக்க வேண்டும்’ என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன..!


இதனையடுத்து, இவ்விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பிரதமர் வெள்ளிக்கிழமையான நேற்று மாலை கூட்டினார். இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவு ஒன்றை ராகுல் காந்தி வெளியிட்டார்.
அதில், ‘கல்வான் தாக்குதலை சீனா திட்டமிட்டு நடத்தியிருக்கிறது..!

அதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்’ என்ற பாதுகாப்புத்துறை இணையமைச்சர் ஸ்ரீபாத் நாயக் கூறியதாக வெளியான தகவலை இணைத்துள்ள ராகுல் காந்தி, ‘இந்தச் செய்தியின் மூலம் கல்வான் தாக்குதலை சீனா திட்டமிட்டு நடத்தியிருப்பது தெளிவாகியுள்ளது..!

அதை அறியாமல் ஆழ்ந்த தூக்கத்தில் பாஜக அரசு இருந்துகொண்டு, பிரச்சனையை மறுத்துள்ளது. அதற்கு இந்திய ராணுவ வீரர்களின் உயிர்கள் விலையாக கொடுக்கப்பட்டுள்ளன’ என்று அந்தப் பதிவில் கூறியுள்ளார்..!