சீன அதிபர் என நினைத்து வட கொரிய அதிபரின் உருவபொம்மையை எரித்த பாஜகவினர்

0
21

சீன அதிபரின் உருவபொம்மையை எரிப்பதற்கு பதிலாக வட கொரிய அதிபரின் உருவபொம்மையை எரித்துள்ளனர் மேற்கு வங்கத்தை சேர்ந்த பாஜகவினர்.

[embedyt]https://youtu.be/HLJe041xmHU[/embedyt]


கடந்த திங்கள்கிழமை இரவு இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.அதன்படி, இந்திய ராணுவம் தரப்பில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தததாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து சீன பொருட்கள் எதையும் பயன்படுத்தப்போவதில்லை என சமூகவலைதளங்களில் பலவிதமான கருத்துகள் விமர்சிக்கப்பட்டது.


இந்நிலையில், சீனா மீதுள்ள கோபத்தினால் சீன அதிபர் சீ ஜின்பிங்கின் உருவ பொம்மை என நினைத்து வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் உருவபொம்மையை எரித்து தங்களுது எதிர்ப்பை தெரிவித்த நிலையில் ஜின்பிங்கின் உருவ பொம்மைக்கு பதிலாக வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் உருவபொம்மையை எரித்த நிகழ்வு எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது இதை சில நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள்.