இஸ்லாமியரின் உடலை குப்பை வண்டியில் ஏற்றிய சம்பவம்: உ.பி அரசுக்கு கண்டன நோட்டீஸ்

0
78

பாஜக ஆளும் உத்தர பிரதேச மாநிலத்தின் லக்னோ மாவட்டம் அருகிலுள்ள பல்ராம்பூர் பகுதியில் சாலையோரத்தில் மயங்கியபடி உயிரிழந்த முகம்மது அன்வரின் உடலை போலிஸார் மேற்பார்வையில் நகராட்சி ஊழியர்கள் குப்பை வண்டியில் ஏற்றி சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது..!


இந்த வீடியோவும் சமூக வலைதளங்கள் மூலம் பரவி வருகிறது. இதனையடுத்து, வீடியோவில் காணப்பட்ட காவல்துறையினர் அனைவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்..!


இந்நிலையில், இந்த சம்பத்தை அறிந்த சிறுபான்மையின் நல ஆணையமும், தேசிய மனித உரிமைகள் ஆணையமும் உத்தர பிரதேச அரசு, பல்ராம்பூர் நகராட்சி ஆணையர், மாநில போலிஸ் டிஜிபி ஆகியோருக்கு கூட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளன..!


அதில், “சாலையில் விழுந்து உயிரிழந்தவரின் உடலை குப்பை வண்டியில் எடுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது..!

அரசு ஊழியர்களிடமிருந்து இதனை யாரும் எதிர்ப்பார்க்கவில்லை. இது வெட்கக்கேடானது. போலிஸாரும், அரசு ஊழியர்களும் நடந்துகொண்ட விதம் நாகரிகமற்ற செயல். இது தொடர்பாக உ.பி. போலிஸ் டிஜிபி, பல்ராம்பூர் நகராட்சி ஆணையர், தலைமை செயலாளர் என அனைவரும் 4 வாரத்திற்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையம் குறிப்பிட்டுள்ளது..!


இது தொடர்பாக வரும் ஜூன் 15ஆம் தேதிக்குள் மாவட்ட நிர்வாகமும், நகராட்சி ஆணையரும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.