வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் புதுச்சேரி மக்களை சிறப்பு விமானங்கள் இயக்கி புதுச்சேரி கொண்டு வர முதல்வர் வே. நாராயணசாமி அவர்களிடம் SDPI கட்சி கோரிக்கை

0
18

வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் புதுச்சேரி மக்களை சிறப்பு விமானங்கள் இயக்கி புதுச்சேரி கொண்டு வர புதுச்சேரி முதல்வர் மாண்புமிகு முதல்வர் வே. நாராயணசாமி அவர்களிடம் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட முதல்வர் விரைவில் அவர்களை தாயகம் திரும்பும் பணியை புதுச்சேரி அரசு மேற்கொள்ளும் என்று உறுதியளித்தார்.

புதுவை மாநில இணை ஒருங்கிணைப்பாளர் அப்துல்லா, நெல்லி தோப்பு தொகுதி தலைவர் ஹனிஃபா, மக்களம் தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் பரக்கத்துல்லாஹ் உருளையன் பேட்டை பொறுப்பாளர் ஜாகிர் உசேன், வழக்கறிஞர் அப்துல் அஜீஸ் ஆகியோர் முதல்வரை சந்தித்து இந்த கோரிக்கை மனுவை அளித்தனர்.