ஆதரவற்ற நிலையில் உயிரிழந்த பத்மா மூதாட்டியின் உடலை நல்லடக்கம் செய்த SDPI கட்சியினர்!

0
16

களக்காட்டில் ஆதரவற்ற நிலையில் உயிரிழந்த மூதாட்டியின் உடலை எஸ்டிபிஐ கட்சியினர் நல்லடக்கம் செய்தனர்…!

Download India 7 News App Google Play Store


நெல்லை மாவட்டம், களக்காடு கோட்டை யாதவர் கிழத்தெருவை சேர்ந்தவர் முத்தையா மனைவி .பத்மா (62). கடந்த சில ஆண்டுகளுக்கு முன் முத்தையா இறந்ததால் பத்மா தனியாக வசித்து வந்தார்..!

ஆதரவற்ற நிலையில் வாழ்ந்து வந்த அவர் உடல்நல குறைவு காரணமாக நேற்று இரவு உயிரிழந்தார். அவரது உடலை தகனம் செய்ய யாரும் முன்வரவில்லை. இதனையறிந்த களக்காடு நகர SDPI கட்சியினர் மூதாட்டியின் உடலை தகனம் செய்ய முடிவு செய்தனர்..!

அதன்படி மாவட்ட பொருளாளர் களந்தை மீராசா மாவட்ட பொது செயலாளார் பீர் மஸ்தான் தலைமையில் 10க்கும் மேற்பட்ட SDPI கட்சியினர் இன்று காலை மூதாட்டி பத்மாவின் உடலை களக்காடு மூனாற்று பிரிவில் உள்ள இடுகாட்டிற்கு எடுத்து சென்றனர். அங்கு இறுதி சடங்கு நடத்திய பின்னர் மூதாட்டியின் உடலை தகனம் செய்தனர்..!


மனிதநேயம் இன்னமும் சாகவில்லை என்பதை உணர்த்தும் வகையில் ஆதரவற்ற மூதாட்டியின் உடலை தகனம் செய்த SDPI கட்சியினரின் செயலை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்..!