ஒரே டிக்கெட்டை பலரும் ஷேர் செய்து ‘நானும் தீபிகா படத்தை கேன்சல் செய்துவிட்டேன் என்று பகிர்ந்திருப்பது, இணையதளவாசிகளிடையே சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது

JNU வளாகத்தில் நடைபெற்ற கண்மூடித்தனமான தாக்குதலை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன

Advertisement

அதேபோல JNU வளாகத்திற்கு வெளியே மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டும் வருகின்றனர்..!

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.!

அந்த வகையில் பாலிவுட் நட்சத்திரமான தீபிகா படுகோன், மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு அளித்தார்..!

தீபிகாவின் ஆதரவுக்கு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வந்தனர்..!

நடிகை என்பதையும் மீறி சமூக பிரச்னைகளில் குரல் கொடுக்கும் தீபிகாவுக்கு வாழ்த்துகள் என கருத்து தெரிவித்து வருகின்றனர்..!

அதேவேளையில் ஒரு தரப்பு தீபிகாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். வெளிவர இருக்கும் தீபிகாவின்‘சபாக்’ திரைப்படத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

#boycottchhapaak என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து தங்களது எதிர்ப்பை தெரிவித்த பலரும் முன்பதிவு செய்த ‘சபாக்’ திரைப்படத்திற்கான டிக்கெட்டை ரத்து செய்து விட்டதாகவும் பதிவிட்டனர்..!

பதிவிட்டதோடு மட்டும் இல்லாமல் கேன்சல் செய்யப்பட்ட டிக்கெட்டையும் இணைத்திருந்தனர்..!ஆனால் ஒரே டிக்கெட்டை பலரும் ஷேர் செய்து ‘நானும் கேன்சல் செய்துவிட்டேன். நானும் கேன்சல் செய்துவிட்டேன்’ என்று வடிவேல் நானும் ரவுடி தான் என்று சொல்லும் போல் கூறியுள்ளனர்..!ஒரே நாள், ஒரே திரையரங்கம், ஒரே நேரம், அதே 3 இருக்கைகள் என ஒரே போட்டோவை பலரும் பகிர்ந்திருப்பது இணையதளவாசிகளிடையே சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது..!


”அது எப்படிப்பா 3 சீட்டுக்கு இவ்வளவு பேர் புக் செஞ்சி இருக்கீங்க.?” என பலரும் நகைச்சுவையாக கேள்வி எழுப்பி வருகின்றனர்..!

பாஜக”வினர்கள் பதில் கொடுக்காமல் ஓடுகிறார்கள்

Show More
Back to top button