பொதுவான செய்திகள்

வாணியம்பாடியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைப்பது குறித்து நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் உடன் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

வாணியம்பாடியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைப்பது குறித்து நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் உடன் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஜூன், 11 : திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைப்பதற்காக கருத்துகேட்பு கூட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ம.ப. சிவன் அருள் தலைமையில் நடைபெற்றது இதில் உரிமையியல் நீதிபதி மாலதி, குற்றவியல் நீதித்துறை நடுவர் காளிமுத்துவேல், சார்பு நீதிபதி ராமசந்திரன் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் ஆகியோர் கலந்து கொண்டனர் இதில் வழக்கறிஞர்களிடம் கருத்து கேட்பு நடைபெற்றபோது வாணியம்பாடி தற்போது அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள நீதிமன்ற வளாகம் வட்டாட்சியர் அலுவலகம், பத்திரப்பதிவு துறை அலுவலகம், வருவாய் ஆய்வாளர், அலுவலகம், காவல் நிலையங்கள், கிளை சிறைச்சாலை ஆகியவற்றை தற்போது அமைந்து செயல்பட்டு வருகிறது ஆகவே அதே பகுதியில் தொடர்ந்து ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைத்து தரவேண்டும் என்று ஒருங்கிணைந்த கருத்தாக வழக்கறிஞர்கள் தெரிவித்ததை மனுவாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர் அதை தொடர்ந்து ஆலோசனை செய்யப்பட்டு பின்னர் தெரிவிப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார் இதில் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி, வட்டாட்சியர் சிவப்பிரகாசம் ஆகியோர் உடனிருந்தனர்.

தென்றல் தமிழரசன்
வாணியம்பாடி செய்தியாளர்
திருப்பத்தூர் மாவட்டம்.

Related Articles

Check Also
Close
Back to top button