விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடந்த சாலை விபத்தில் தலைமைச்செயலகத்தில் பணியாற்றி வந்த உதவி காவல் ஆய்வாளர் உயிரிழப்பு.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடந்த சாலை விபத்தில் தலைமைச்செயலகத்தில் பணியாற்றி வந்த உதவி காவல் ஆய்வாளர் உயிரிழப்பு.

Advertisement

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புத்தூர்  பகுதியை சேர்ந்த பிரதீஷ் என்ற உதவி காவல் ஆய்வாளர் சென்னை தலைமை செயலகத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
 தற்போது 4  நாட்கள் விடுமுறை எடுத்து சொந்த ஊருக்கு வந்த பிரதீஷ் விடுமுறை முடிந்து  தனது இரு சக்கர வாகனத்தில் சென்னை நோக்கி பணிக்கு சென்று கொண்டிருந்தார்.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த டிப்பர் லாரி மீது இரு சக்கர வாகனம்  பயங்கரமாக மோதி விபத்தில் உதவி காவல் ஆய்வாளர் பிரதீஷ் சம்பவ இடத்திலேயே உடல் சிதைந்து உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம்பட்டி காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More
Back to top button