பொதுவான செய்திகள்

விருதுநகரில் தனியார் செல்போன் டவரில் எரி வாலிபர் தற்கொலை முயற்சி 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு.

விருதுநகரில் தனியார் செல்போன் டவரில் எரி வாலிபர் தற்கொலை முயற்சி 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு.

விருதுநகர் அருகே பாண்டியன் நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் முனியாண்டி (38)  மனைவி ஜானகி (30) திருமணம் முடிந்து 15 ஆண்டுகளாக குழந்தை இல்லாத நிலையில் கணவன் மனைவி இடையே தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.
 முனியாண்டி ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். இவர் மீது கொலை வழக்கு திருட்டு வழக்கு என 10க்கும் மேற்பட்ட வழக்குகள் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கு காலத்தில் சரியான வருமானம் இல்லாமல் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 
இந்நிலையில் தீடிரென இன்று மாலை பாண்டியன் நகர் அருகே கையில் பெட்ரோலுடன் தனியார் செல்போன் டவரில் மேலே ஏறி தற்கொலை முயற்சி செய்தார். இதனையறிந்த பாண்டியன் நகர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர், துணை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் தலைமையில் முனியாண்டியிடம் 4 மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தி  செல்போன் டவரிலிருந்து கீழே இறங்கினார்கள். பின்பு காவல்துறையினர் முனியாண்டிக்கு மனநல ஆலோசனை வழங்கி அவரை அவர் குடும்பத்தினருடன் வீட்டிற்கு அனுப்பி  வைத்தனர்.

Related Articles

Back to top button