இந்தியா

நாக்பூர் ஜில்லா பரிஷத் தேர்தலில் காங். அமோக வெற்றி – பாஜக அதிர்ச்சி தோல்வி

பயங்கரவாதத்தின் தலைமைபீடமான நாக்பூரில்
– பாஜக அதிர்ச்சி தோல்வி காங் அமோக வெற்றி
=======================

நாக்பூர் ஜில்லா பரிஷத்துக்கான தேர்தல் அண்மையில் நடைபெற்றது.
இத்தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன.

இதில் நாக்பூர் ஜில்லா பரிஷத்தை காங்கிரஸ் வென்றுள்ளது. மொத்தம் 58 உறுப்பினர்களுக்கான தேர்தலில் காங்கிரஸ் 31-ல் வென்றது. பாஜகவுக்கு 14; தேசியவாத காங்கிரஸுக்கு 10 இடங்கள் கிடைத்தன.

நாக்பூரில் பாஜக தோல்வியை தழுவியிருப்பது காங்கிரஸ் கட்சியினரை உற்சாகப்படுத்தியுள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் தமது ட்விட்டர் பக்கத்தில், ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் அமைந்துள்ள நாக்பூரில் காங்கிரஸ் வென்றுள்ளது. மக்கள் பாஜகவை நிராகரித்துவிட்டனர் என பதிவிட்டுள்ளார்.

நிதின் கட்காரி ஊரில் தோல்வி இதனிடையே மத்திய அமைச்சர் நிதின் கட்காரியின் சொந்த ஊரில் பாஜக வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Back to top button