செங்கல்பட்டு மாவட்டம்
AIYF அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கொரோனா நிவாரணம் சம்மந்தமாக
மாவட்ட ஆட்சியரிடம் மனு.

செங்கல்பட்டு மாவட்டம்

Advertisement

AIYF அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கொரோனா நிவாரணம் சம்மந்தமாக
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கபட்டது

 1. கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மார்ச் மாதம் முதல் வருகிற ஆகஸ்ட் மாதம் வரை செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை ரத்து செய்யவேண்டும்
 2. பொதுத்துறை வங்கிகள் தனியார் வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் 6 மாதத்திற்கு கடன் தவணையை வசூலிக்ககூடாது என ரிசர்வ் வங்கி வழிகாட்டிய பின்னரும்
  ஏழை எளிய மக்களிடம் தனியார் வங்கிகளும் நிதிநிறுனங்களும் கடன் தவணையையும் வட்டித்தொகையையும் கேட்டு மிரட்டுகிறார்கள்.
  நிதிநிறுவனங்கள் மகளிர் சுய உதவிக்குழு பெண்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்கிறார்கள்.
  ஆகவே இதனை தடுத்து நிறுத்தி இந்த ஆண்டு முழுவதும் கடன் தவணையை திருப்பி செலுத்த விலக்கு அளிப்பதோடு வட்டித் தொகை முழுவதையும் ரத்துசெய்ய அறிவுறுத்த வேண்டுகிறோம்.
 3. கொரோனா நோய்த்தொற்றுக்கு உள்ளாகி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிவாரணம் வழங்குவதோடு
  உயிரிழப்பு ஏற்பட்ட குடும்பங்களுக்கு தலா 25லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும்.

4.கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழைஎளிய குடும்பங்களுக்கு ரூ.15ஆயிரம் நிவாரணம் வழங்கவேண்டும்

 1. கொரோனா ஊரடங்கால் சிறு மற்றும் குறுந்தொழில்கள் முடங்கிபோயுள்ளது.
  இதனால் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.
  தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பணியாட்களை பெருமளவு வேலையிலிருந்து வெளியேற்றி வருகிறது. இதனால் தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் பெருமளவு அதிகரித்து சமூகப்பிரச்சினைகளுக்கு வித்திடும்.
  ஆகவே தமிழகத்தின் நலன் கருதி சிறு மற்றும் குறுந்தொழில்களை பாதுகாக்க வேண்டுமெனவும் மேலும் சிறு குறுந்தொழில்களுக்கு மானியத்துடன் கடன் வழங்க வேண்டுமெனவும்
  பணியாட்களை வேலை நீக்கம் செய்யும் தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவேண்டும்.
 2. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ5ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டுமெனவும்
  மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த போது
  அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம்
  தேசியகுழு உறுப்பினர் ஜி.ஜெகதீசன்
  மாநிலதுணை தலைவர் மோ.வெங்கடேசன்
  மாவட்ட தலைவர் சேகுவேராதாஸ்
  மாநிலகுழு உறுப்பினர் ஆறுமுகம்
  மாவட்டதுணை செயலாளர்கள்.பிரதாபன்.எம்.நாகராஜ்
  மாவட்டகுழு உறுப்பினர் இன்பராஜ்.
  அஜித்குமார் விக்கி
  பா.ஐயனார் பங்கேற்றனர்

Show More
Back to top button