முஸ்லிம்களுக்கு சிகிச்சை அளிக்க மாட்டோம் என்று வாட்ஸ்அப்பில் பதிவு செய்த பெண் மருத்துவர் உள்பட 3 பேர் மீது வழக்கு

ராஜஸ்தான் மாநிலம் சர்தார்ஷஹார் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையின் மருத்துவர்கள் தங்களுக்கென வாட்ஸ் அப் குரூப் ஒன்றை வைத்துள்ளனர். அதில் மருத்துவம் தொடர்பான தகவல்களை அவர்கள் பகிர்ந்து வந்துள்ளனர்..!

Advertisement

அதே மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு பெண் மருத்துவர் உள்ளிட்ட 3 பேர் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி இஸ்லாமியர்களுக்கு தாங்கள் சிகிச்சை அளிக்கப்போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் இஸ்லாமிய மருத்துவர்களிடம் சென்று அவர்கள் சிகிச்சை எடுத்துக்கொள்ளட்டும் எனவும் கூறியுள்ளனர்..!


இந்த பதிவின் ஸ்கீரின்ஷாட் அண்மையில் சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, இதுதொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து வாட்ஸ்அப்-ல் அவ்வாறு பதிவிட்ட பகவதி பதாலியா, லலித் சிங் மற்றும் அங்கிதா ஆகிய 3 மருத்துவர்கள் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்..!


இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்துள்ள தனியார் மருத்துவமனையின் உரிமையாளர் சுனில் சவுத்திரி, தங்கள் மருத்துவமனையில் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், யாரையும் தங்கள் மருத்துவமனை புறக்கணிப்பதில்லை எனவும் தெரிவித்துள்ளார்..!

அத்துடன் வாட்ஸ்அப்-ல் தவறான கருத்தை பரப்பிய மருத்துவர்கள் மீது, போலீசார் விசாரணைக்குப் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்..!

Show More
Back to top button