நியூசிலாந்து உருவானது போல் சென்னையையும் கொரோனா இல்லாத சென்னையாக மாற்ற முடியும் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சென்னை: நியூசிலாந்து உருவானது போல் சென்னையையும் கொரோனா இல்லாத சென்னையாக மாற்ற முடியும் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் 200க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆச்சர்யப்படும் வகையில் நியூசிலாந்து நாடு மட்டும் கொரோனா இல்லாத நாடாக மாறியுள்ளது.
நியூசிலாந்தில் ஒரு கொரோனா நோயாளி கூட இல்லை. ஊரடங்கு உள்பட எந்த கட்டுப்பாடும் அந்நாட்டில் இல்லை. இதை அந்நாடு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
இந் நிலையில் கொரோனா இல்லாத நாடாக நியூசிலாந்து உருவானது போல் சென்னையையும் மாற்ற முடியும் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:
கொரோனா இல்லாத திருவிக நகர் மண்டலத்தை அரசு அதிகாரிகள் உருவாக்குவார்கள். கொரோனா பரவலை தடுக்க தெருவாரியாக 100% விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றார்