ரயிலில் மதுரை வந்த மூதாட்டி கவனக்குறைவால் கேரளா சென்றதால் , மொழி பிரச்சனையால் , மனநலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவலம்.

ரயிலில் மதுரை வந்த மூதாட்டி கவனக்குறைவால் கேரளா சென்றதால் , மொழி பிரச்சனையால் , மனநலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவலம் ; மதுரை ஆட்சியரின் முயற்சியால் 80 நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட மூதாட்டி

Advertisement

மதுரை ஆரப்பாளையம் பொன்னகரம் பகுதியை சேர்ந்த 70 வயதான கஸ்தூரி என்ற மூதாட்டி , இவர் கடந்த மார்ச் மாதம் 18 ஆம் தேதி அன்று சென்னையில் இருந்து ரயில் மூலம் மதுரை வருவதற்காக , இரயிலில் அவர் வந்த போது  மதுரை ரயில் நிலையத்தில்  இறங்காமல்  தூங்கத்திலும் கவன குறைவாகும் இருந்துள்ளார் .

இதனால் ரயில் கேரள மாநிலம் கொல்லம் சென்றுள்ளது. ரயில் நிலையத்தில் இருந்த  போலீசுக்கு மூதாட்டி பேசிய தமிழ் புரியாத காரணத்தால் அவரை மன நலம் பாதிக்க பட்டவர் என்று நினைத்து , கோழிக்கோடு மன நல மருத்துவமனையில் சேர்த்துவிட்டனர்.

மூதாட்டி குடும்பத்தினர் யாரையும் தொடர்பு கொள்ளவும் முடியாத சூழ்நிலையில் அடுத்த கடந்த மார்ச்சு மாதம் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவும் அமுலுக்கு வந்து விட்டது.இந்த நிலையில் அவரது மகள் பிரியா கடந்த 80 நாட்களாக தாயை காணாமல் தேடி அலைந்துள்ளார்.கடைசியில் அவர் கேரளாவில்,  கோழிக்கோடு மன நல மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டிருப்பது தெரிய வந்தது.

தாயை மீட்க மகள் பிரியா பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் முடியாத நிலையில் , நடந்த நிகழ்வுகளை மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று தாயை மீட்டுத்தர கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார் .
கஸ்தூரியின் மகள் பிரியா வழங்கிய மனுவின் அடிப்படையில் உடனடியாக கோழிக்கோடு மாவட்ட ஆட்சியரிடம் மதுரை மாவட்ட ஆட்சியர் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டுள்ளார்.

இதன் காரணமாக மூதாட்டி மன நல மருத்துவ மனையில் இருப்பது உறுதியானது.மூதாட்டி கஸ்தூரியை மீட்டு மதுரை அழைத்து வருவதற்காக மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் அவர்களின் ஏற்பாட்டில் மதுரையில் இருந்து கேரளா கோழிக்கோடு சென்று மனநல மருத்துவமனையில் உள்ள மூதாட்டியை மீட்டுவர சிறப்பு அனுமதி பாஸ்கள் பெற்று கொடுத்த ஆட்சியர் , மதுரை ரெட்கிராஸ் அமைப்பிற்கு ஆட்சியர் வினய் உத்தரவிட்டார்.

மதுரை ரெட் கிராஸ் நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், முத்துக்குமார் ஆகியோர் இலவச வாகன வசதி செய்து கேரளாவிற்கு சென்று கோழிக்கோடு மனநல மருத்துவமனையில் இருந்த மூதாட்டி கஸ்தூரியை மீட்டு வந்து மதுரை ஆட்சியர் வினய் அவர்களிடம் ஒப்படைத்தனர்.பின்னர் மூதாட்டிக்கு ‘கொரோனா பரிசோதனை மற்றும் கவுன்சிலிங் வழங்கப்பட்டு அவரது குடும்பத்தாரிடம் மூதாட்டி கஸ்தூரி ஒப்படைக்கப்பட்டார்.

நன்றாக இருந்தவரை மன நலன் பாதிக்கப்பட்டவர் என நினைத்து ,  கேரளா மன நல மருத்துவ மனையில் 80 நாட்களாக அடைத்து வைத்தது மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

Show More
Back to top button