பயிற்சி விமானம் கீழே விழுந்து விபத்து.. தமிழகத்தை சேர்ந்த #அனிஸ்_பாத்திமா உட்பட இரண்டு பேர் உயிரிழப்பு

ஒடிசா மாநிலத்தில் பிர்சாலா என்னும் பகுதியில் அரசு விமான பயிற்சி நிறுவனம் ஒன்று இருக்கிறது..! விமானிகள் பெரும்பாலும் இங்கு பயிற்சி பெறுவது வழக்கமானதால் தினமும் அங்கு பயிற்சி வகுப்புகள் நடக்கிறது..!

Advertisement

அதே போல இன்று காலையும் சிறிய ரக விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன..! அப்போது பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானங்களுள் ஒன்று விமானியின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது..!
அந்த விபத்தில் படுகாயம் அடைந்த விமானி சஞ்சிப் குமார் மற்றும் பயிற்சி விமானி அனிஸ் பாத்திமா ஆகிய இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்..!

இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் அந்த விமானத்தில் பயணித்த பயிற்சி விமானி அனீஸ் பாத்திமா(20) தமிழகத்தை சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. மேலும், பயிற்சி விமானத்தில் ஏதேனும் கோளாறு இருந்ததா என்றும் விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது ஏன் என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.

அனிஸ் பாத்திமா ( 20 )

Show More
Back to top button