எம்எல்ஏ எஸ் பவுன்ராஜ் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கினார்.
எம்எல்ஏ எஸ் பவுன்ராஜ் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கினார்
மயிலாடுதுறை, ஜுன்-08;
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கூடலூர் ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பங்களுக்கு பூம்புகார் எம்எல்ஏ எஸ் பவுன்ராஜ் நிவாரணம் வழங்கினார்.
கொரோனா ஊரடங்கு கரணமாக ஏழை எளிய குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து வாழும் நிலையில் பூம்புகார் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளுக்கும் பூம்புகார் சட்டமன்ற அதிமுக உறுப்பினர் எஸ் பவுன்ராஜ் தனது சொந்த நிதியில் இருந்து தினம் ஒரு ஊராட்சிக்கு நிவாரணமாக அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கிவரும் நிலையில் தற்போது செம்பனார்கோயில் ஒன்றியத்துக்கு உட்பட்ட கூடலூர் ஆட்சியில்ஊராட்சியில் கூடலூர், நல்லிச்சேரி, புடையூர், கோட்டகம் ஆகிய 4 கிராமங்களில் வாழும் 500-க்கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கி கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.
நிகழ்ச்சியை கூடலூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வம் ஏற்பாடு செய்திருந்தார். மேலும், துணைத்தலைவர் பரிமளா ராமு மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இரா.யோகுதாஸ்,
மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர்.