பொதுவான செய்திகள்

UNADAPநல்லெண்ணத்தூதராக மதுரை சலூன் கடைக்காரர் மகள் நேத்ரா அறிவிப்பு! மனித நேயத்திற்க்கு கிடைத்த கௌரவம்

மதுரை மேலமடைப் பகுதியில் சலூன் கடை வைத்திருக்கும் மோகன், கொரோனா ஊரடங்கில் கஷ்டப்படும் அப்பகுதி மக்களுக்கு தனது மகள் நேத்ராவின் (வயது 15) எதிர்காலத்திற்க்காக சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த பணத்தைக் கொண்டு அப்பகுதி மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்
இந் நிலையில் கடந்த வாரம் மக்களுக்கு வானொலி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி அவர்கள் கொரோனா ஊரடங்கில் கஷ்டப்படும் மக்களுக்கு மகளின் படிப்புச் செலவுக்காக சேர்த்து வைத்திருந்த பணத்தை எடுத்து நிவாரணம் வழங்கிய மோகனைப் பாராட்டுவதாக தெரிவித்தார்.
அதன்பின்பு அவர்களின் கருணை மனது உலகம் முழுவதும் தெரிந்தது அதன் பின்பு பலரும் பாராட்டினார்கள்,
இந்த நிலையில், மோகன் மகள் நேத்ராவை UNADAP வளர்ச்சி மற்றும் அமைதிக்கான பிரிவு `ஏழை மக்களின் நல்லெண்ணத் தூதராக’ அறிவிக்கப்பட்டுள்ளார்.மேலும், அவருடைய எதிர்காலத்திற்காக ஒரு லட்ச ரூபாயை ஊக்கத் தொகையாக வழங்கியுள்ளது
நேத்ராவை நல்லெண்ணத் தூதராக நியமித்துள்ளது UNADAP (மேம்பாடு மற்றும் அமைதிக்கான ஐக்கிய நாடுகளின் சங்கம்) என்கிற ஓர் அரசு சாரா அமைப்பு

Related Articles

Back to top button