கண்ணாடி உடைந்திட்டு அம்மா அடிப்பாங்க என்ற பயத்தில் 12 வயது சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை
12 வயது சிறுவன் தற்கொலை
துரைப்பாக்கம்: விளையாடும்போது தவறுதலாக பிரிட்ஜ் கண்ணாடி உடைந்ததால் பெற்றோர் கண்டிப்பார்கள் என்று பயந்து சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நீலாங்கரை அடுத்த ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரைச் சேர்ந்தவர் பூபாலன் (40). இவரது மனைவி உஷா (35). இவர்களது மகன்கள் தஷ்வந்த் (12), பிரமோத் (9). இந்நிலையில், பெற்றோர்இருவரும் வழக்கம்போல் நேற்று காலை வேலைக்கு சென்றனர். சிறுவர்கள் மட்டும் வீட்டில் தனியாக இருந்தனர். அப்போது, பிரமோத் அறையில் விளையாடி கொண்டிருந்தான்.
இதற்கிடையில், தஷ்வந்த் தின்பண்டங்களை எடுப்பதற்காக சமையல் அறையில் இருந்த பிரிட்ஜை திறந்து பார்த்தான். அப்போது, தவறுதலாக பிரிட்ஜின் உள்ளே இருந்த கண்ணாடி உடைந்தது. இதனால் பெற்றோர்கள் அடிப்பார்களே என்று பயந்து அஸ்வந்த் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது மேலும் இதுகுறித்து காவல்துறை விசாரித்து வருகிறது