இனவெறி விமர்சனங்களால் பாதிக்கப்பட்டவன் நான்.. கிரிக்கெட்டிலும் இனவெறி உண்டு: கிறிஸ் கெய்ல் வேதனை

டெல்லி: தாமும் இனவெறி விமர்சனங்களால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கிரிக்கெட்டிலும் இனவெறி இருக்கிறது என்று மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் கிறிஸ் கெய்ல் வேதனையுடன் கூறியுள்ளார்.

கிரிக்கெட்டிலும் இனவெறி உண்டு : கிறிஸ் கெய்ல் வேதனை

Advertisement


அமெரிக்காவில் கறுப்பர் இனத்தின் ஜார்ஜ் ஃபிளாய்ட் (ஜார்ஜ் பிளாய்டு, ஜார்ஜ் பிளைய்டு, ஜார்ஜ் ஃப்ளாய்டு) போலீசார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் இன கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது. ஒட்டுமொத்த அமெரிக்கா தேசமும் பற்றி எரிகிறது.
1968-ல் மார்ட்டின் லூதர் கிங் படுகொலைக்கு பின் இனக் கொந்தளிப்பை எதிர்கொள்ளும் அமெரிக்கா

கறுப்பர் போராட்டங்கள்
உலக நாடுகளில் உள்ள கறுப்பர்கள் அனைவரும் அணிதிரண்டு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களால் அமெரிக்கா மட்டுமல்ல உலக நாடுகளும் அதிர்ந்து போயிருக்கின்றன. அமெரிக்கா அதிபர் டிரம்ப், போராட்டங்களுக்கு அஞ்சி வெள்ளை மாளிகையில் பதுங்கு குழிகளில் அடைக்கலம் தேடிக் கொண்டிருக்கிறார் என்கின்றன செய்திகள்.

கிறிஸ் கெய்ல் வேதனை
இந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான கிறிஸ் கெய்ல் தமது சமூக வலைதளங்களில் ஒரு தகவலைப் பதிவிட்டிருக்கிறார். அதில் தாமும் இனவெறி விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறேன். கறுப்பர் இன மக்களை முட்டாள்களைப் போல நினைக்காதீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட்டிலும் ஒடுக்குமுறை
மேலும் நான் உலக நாடுகள் பலவற்றுக்கும் பயணம் செய்திருக்கிறேன். அங்கெல்லாம் என்னை நோக்கி இன ரீதியிலான விமர்சனங்கள் வந்திருக்கின்றன. இனப்பாகுபாடு என்பது கால்பந்தாட்டத்தில்தான் என்று இல்லை.. கிரிக்கெட்டிலும் இருக்கிறது எனவும் சுட்டிக்காட்டியிருக்கிறார் கிறிஸ் கெய்ல்.

எந்த சம்பவம் ?
ஆனால் தாம் பட்ட துயரங்களுக்குக் காரணமான சம்பவங்களை கிறிஸ் கெய்ல் விளக்கவில்லை. கிரிக்கெட் மைதானத்தில் கெய்ல் நின்றாலே புயல் மையம் கொண்டுவிட்டது என அர்த்தம்.. அத்தகைய சிறந்த வீரரையும் இன ஒடுக்குமுறையும் இனப்பாகுபாடும் எத்தகைய வேதனைக்குள்ளாக்கியிருக்கிது!

Show More
Back to top button