தமிழ்நாடுபாஜக - BJPபொதுவான செய்திகள்

கோவையில் கோயில் முன் இறைச்சி வீசிய ஹரி கைது, பன்றி கறியும் வாங்கியது தெரியவந்துள்ளது

கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளன..!


இந்நிலையில், கோவையில் ஒரு கோவிலின் முன்பு மர்ம நபர்கள் இறைச்சியை வீசிச்சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..! கோவையில் மத கலவரம் உண்டாக்க திட்டம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்


கோவை டவுன்ஹாலை அடுத்த சலீவன் வீதியில் வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவில் அமைந்துள்ளது. கொரோனா காரணமாக அடைக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று காலை கோவில் கதவின் முன்பு இறைச்சியை மர்ம நபர்கள் இருவர் வீசி சென்றுள்ளனர்..!


பின்னர் கோவில் முன்பு வந்த மக்கள், இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து வெரைட்டி ஹால் ரோடு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அந்த பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்..!


இது குறித்து கமிஷனர் சுமித் சரண் கூறுகையில், “சிசிடிபி காட்சிகள் வைத்து அவரை அடையாளம் கண்டு கைது செய்துள்ளோம். அவரது பெயர் ஹரி ராம்பிரகாஷ் எனவும் அவர் மனநிலை சரி இல்லாதவர் என்றும் ஹரியின் அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் அவர், ஒரு கடையிலிருந்து ஒரு கிலோ பன்றி கறியையும் வாங்கி உள்ளார்” என்று சுமித் சரண் தெரிவித்துள்ளார்..!

குற்றவாளிகள் யாரென்று தெரியாமல் பாஜகவினர்கள் விஷம கருத்துக்களை சமூக வளைத்தளங்களில் பரப்பி வந்தனர்,

இந்நிலையில் கோவை சிட்டி போலிஸ் ட்வீட்டரில் “ஒரே நபர் ஹரி கைது” என்று ட்வீட்

Related Articles

Back to top button