சேலம் மாவட்டம்
வீரகனூரில் நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல மழை பொழிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம்
வீரகனூரில் நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல மழை பொழிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி எடுத்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பொழிந்து வந்தது. ஆனால் சேலம் மாவட்டத்தில் சில பகுதியில் அக்னி நட்சத்திர வெயில் காரணமாக பயிர்கள் கருகி கால்நடைகளுக்கு கூட உணவு இல்லாத நிலை இருந்தது. இந்நிலையில் இன்று 3 மணி அளவில் வீரகனூரில் பலத்த காற்றுடன் நல்ல மழை பொழிந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முன்னதாக சூறைக்காற்றுக்கு ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் பழமையான புளிய மரம் ஒன்று முறிந்து விழுந்து போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது சேலம் மாவட்டம் வீரகனூர் செய்தியாளர் பெ.சுரேஸ்குமார்

Advertisement
Show More
Back to top button