பொதுவான செய்திகள்

சீர்காழி அருகே திமுக உட்கட்சி மோதல் காரணமாக இளைஞருக்கு அரிவாள் வெட்டு, மருத்துவமனையில் அனுமதி.

சீர்காழி அருகே திமுக உட்கட்சி மோதல் காரணமாக இளைஞருக்கு அரிவாள் வெட்டு, மருத்துவமனையில் அனுமதி

மயிலாடுதுறை, மே-28;
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காத்திருப்பு சம்பனோடையை சேர்ந்தவர் பட்டதாரி சதீஷ்குமார்(26) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிமாறன். இருவரும் திமுகவைச் சேர்ந்தவர்கள் இருவருக்கும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் திமுக உட்கட்சித் தேர்தலில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. உள்ளாட்சி தேர்தலில் சதீஷ்குமார் மணிமாறன் மனைவிக்கு எதிராக போட்டியிட்டு அதில் மணிமாறன் மனைவி வெற்றி பெற்றுள்ளார். இதிலிருந்து இருவருக்கும் ஏற்பட்ட முன்விரோதம் இருவருக்கும் இடையே தகராறுகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சதீஷ்குமார் அவரது வீட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது வழிமறித்து மணிமாறன் மற்றும் அவரது மகன்கள் அன்பு மாறன், அருண்மாறன் உள்ளிட்டோர் சரமாரியாக சதீஷ்குமாரை அரிவாளால் வெட்டியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த சதீஷ்குமார் சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுதொடர்பாக பாகசாலை போலீசார் வழக்குப் பதிந்து மணிமாறன் கைது செய்தனர் பின்னர் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

படம்;- மணிமாறன்.

இரா.யோகுதாஸ்,
மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர்.

Related Articles

Back to top button