சீர்காழி அருகே 144 தடை உத்தரவை மீறி கறி விருந்து வைத்து கொண்டாடிய இளைஞர்கள் சமூக வலைதளங்களில் பருவும் செல்ஃபி புகைப்படம்.

சீர்காழி அருகே 144 தடை உத்தரவை மீறி கறி விருந்து வைத்து கொண்டாடிய இளைஞர்கள் சமூக வலைதளங்களில் பருவும் செல்ஃபி புகைப்படம்

Advertisement

தமிழகத்தில் கொரோனா தொற்றால் 144 தடை உத்தரவு போடப்பட்டு 50 நாட்களுக்கும் மேலாக மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளன தொற்று பரவாமல் இருக்க அரசு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காத்திருப்பு கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் 20 பேர் வாழைதோப்பில் தலைவாழை இலை போட்டு கோழி கறி பிரியாணி சமைத்து விருந்து வைத்து கொண்டாடியுள்ளனர். அப்பொழுது அனைவரும் அமர்ந்து செல்போனில் செல்ஃபி எடுத்துள்ளனர்.

இந்த புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது அந்த விருந்தில் அமர்ந்துள்ள ஒரு இளைஞர் நாகை மாவட்ட காவல் துறையால் வழங்கப்பட்ட போலீஸ் நண்பர் சீருடை அணிந்து இருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இரா. யோகுதாஸ்,
மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர்.

Show More
Back to top button