கோவில் அர்ச்சகர்களுக்கு  நிவாரண உதவிகள் எம்.எல்.ஏ. எஸ்.பவுன்ராஜ் வழங்கினார்.

கோவில் அர்ச்சகர்களுக்கு  நிவாரண உதவிகள் எம்.எல்.ஏ. எஸ்.பவுன்ராஜ் வழங்கினார் 

Advertisement

மயிலாடுதுறை,மே-25:
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட திருக்கடையூர், ஆக்கூர், செம்பனார்கோவில், கீழப்பெரும்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த  கோவில் அர்ச்சகர்களுக்கு   நிவாரணப் பொருள்களை  எம். எல். ஏ.எஸ். பவுன்ராஜ்  வழங்கினார்

தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட திருக்கடையூர், ஆக்கூர், செம்பனார்கோயில், கீழப்பெரும்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 180 க்கும் மேற்பட்ட சிவன் கோயில்களில் பூஜைகள் செய்யும் சிவாச்சாரியார்கள் மற்றும் கோயிலில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 5 கிலோ ஆட்டா, 5 கிலோ காய்கறிகள் மற்றும் ரூ.1000 ரொக்கம்  உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை பூம்புகார் சட்டமன்ற அஇஅதிமுக உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் தனது சொந்த நிதியில் இருந்து வழங்கினார்.

நிகழ்ச்சியில் அகில இந்திய சிவாச்சாரியார்கள் நல சங்கம் பொறுப்பாளர்கள், அதிமுக பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

இரா. யோகுதாஸ்,
மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர்.

Show More
Back to top button