பொதுவான செய்திகள்

வேகமாக குறைந்து வரும் வீராணம் ஏரி நீர்மட்டம் சென்னைக்குக் குடிநீர் அனுப்புவது சிக்கல்
காட்டுமன்னார்கோயில்

வேகமாக குறைந்து வரும் வீராணம் ஏரி நீர்மட்டம் சென்னைக்குக் குடிநீர் அனுப்புவது சிக்கல்

காட்டுமன்னார்கோயில் மே 24

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்
கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி அமைந்துள்ளது இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும்
வீராணம் ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது சென்னை நகர மக்களுக்கு தாகத்தைத் தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது கடந்த சில நாட்களாக கத்திரி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது நாளுக்கு நாள் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது ஏரியின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 42.17 அடி ஆக உள்ளது 51 கனஅடி குடிநீர் தேவைக்காக சென்னைக்கு அனுப்பப்படுகிறது இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வீராணம் ஏரியில் உள்ள நீர் ஆவியாகி செல்கிறது இதன் காரணமாக
நீர் மட்டம் குறைந்து கொண்டே வருகிறது தொடர்ந்து இதே நிலை நீடித்தால் சென்னைக்கு குடிநீர் சிக்கல் ஏற்படும் கோடை மழை பெய்தால் மட்டுமே கூடுதல் தண்ணீர் அனுப்புவதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்

செய்தி
கே.பாலமுருகன்

Related Articles

Back to top button