பொதுவான செய்திகள்

காதலன் என்று கூறி காமுகன் அரங்கேற்றிய கொடூரம்.. பரிதவித்த 17 வயது சிறுமி.

காதலன் என்று கூறி காமுகன் அரங்கேற்றிய கொடூரம்.. பரிதவித்த 17 வயது சிறுமி!!!!!!.!!திருச்சி மாவட்டத்தில் உள்ள உள்ள வளவந்தான்கோட்டை இலங்கை அகதிகள் முகாமை சார்ந்தவர் கிஷாந்த் (வயது 19). திருச்சியில் உள்ள கே.கே.நகர் பகுதியை சார்ந்த 11 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக தெரியவருகிறது. இந்நிலையில், காமுகன் சிறுமியின் புகைப்படத்தை அனுப்பி வைக்குமாறு, காதல் வார்த்தையை அளந்துவிட்டுள்ளான். இதில் மயங்கிய சிறுமியும் தனது புகைப்படத்தை அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில், புகைப்படத்தை மாபிங் செய்து இணையத்தில் வெளியிட்டுவிடுவேன் என்று சிறுமியை மிரட்டி, அங்குள்ள பழைய இரயில் நிலையத்திற்கு வரும் படி கூறியுள்ளார்.ஏற்கனவே காமுகனால் சிறுமி மிரட்டி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு இருந்தார்.

தனக்கு விரைவில் நடக்கும் விபரீதத்தை புரிந்துகொண்ட சிறுமி, இது குறித்து தனது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இது குறித்து சிறுமியின் பெற்றோர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, கிஷாந்தை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சிறுமியை மிரட்டி காதல் என்ற காமுகன் அரங்கேற்றிய கொடூரம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Related Articles

Back to top button