பொதுவான செய்திகள்

பெருநாள் குறித்து பொறுப்புள்ள முதல்வரின் நடவடிக்கைகள் ! இஸ்லாமியர்களுக்கு ஆறுதலான அறிவிப்புகள்

பெருநாள் குறித்து பொறுப்புள்ள முதல்வரின் நடவடிக்கைகள் !

நேற்று ஷவ்வால் பிறை தென்படாததால் இன்று 30 நோன்புகளை நிறைவு செய்து, ஞாயிற்றுக்கிழமை பெருநாள் அனுசரிக்கப்படும் என்று கேரள
காஜிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இதையொட்டி, கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“கேரளாவில் வாரத்தில் 6 நாட்கள் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, ஞாயி்றுக்கிழமை மட்டும் முழு ஊடரங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில், ஞாயி்று அன்று “பெருநாள் அறிவிப்பு” வெளியானதை தொடர்ந்து, அன்றைய தினம் மற்ற நாட்களைப்போல் – ஊரடங்கு தளர்த்தப்படும்.

மாலை நேரம் பிறை பார்க்கப்பட்ட பின், ‘பெருநாள்’ தினம் உறுதி செய்யப்படுவதால், இரவு நேரத்தில் ஷாப்பிங் மற்றும் பெருநாளுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு வசதியாக, இன்று வெள்ளிக்கிழமை முதல் பெருநாள் அன்று இரவு 9 மணி வரை கடைகள் திறந்து செயல்பட அனுமதி அளிக்கப்படும்.

எப்போதும்போல் பெருநாள் விமரிசையாக கொண்டாடும் சூழல், இன்று உலகில் எங்கும் இருப்பதாக தெரியவில்லை. பள்ளிவாசல்கள் மற்றும் ஈத்கா மைதானங்களில் பெருநாள் கூட்டுத் தொழுகை நடத்துவது இறைவிசுவாசிகளுக்கு புண்ணியம் நிறைந்த காரியமாகும். அது இம்முறை சாதியப்படாதது அவர்களுக்கு மிகுந்த மனவேதனையை அளிக்கும் என்பதை இந்த அரசு உணர்ந்துள்ளது. எனினும், நோய்த்தொற்றிலிருந்து சமூகத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, இம்முறை வீடுகளிலேயே தொழுகை நடத்திக்கொள்வதாக தலைவர்கள் முடிவு செய்திருப்பதற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

ஏற்கெனவே கடந்த மே 18 அன்று, பெருநாள் தொழுகை குறித்து, இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் மற்றும் சமயத் தலைவர்களுடன் ஒரு ஆலோசனை நடத்தியிருந்தார். அப்போது, இதுவரை ஊரடங்கு விதிகளை கடைபிடித்து, நோய்த்தொற்று
ஏற்படாமல் சமூகத்தை கட்டுக்குள் வைத்ததற்காக தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், “இம்முறை பெருநாள் தொழுகையை எப்படி செய்யலாம்” என்று கருத்து கேட்டார்.

நீண்ட உரையாடலுக்குப் பின், இதுவரையிலான ஜும்ஆ தொழுகைகள், தராவீஹ் மற்றும் ரமலான் இறுதி பத்து நாட்களின் சிறப்புத் தொழுகைகள் அனைத்தும் பள்ளியில் நிறைவேற்ற முடியாமல் போனது மிகுந்த மனவேதனை அளித்தபோதிலும், தவிர்க்க முடியாத காரணங்களால் பெருநாள் தொழுகையை வீடுகளிலேயே நிறைவேற்றிக் கொள்கிறோம் என்று தலைவர்கள் கூட்டாக தெரிவித்தனர்.

அதேநேரம், நிலைமை சீரான உடன் வழிபாட்டு தலங்களைத் திறக்கவும், பள்ளிப் பொதுத் தேர்வுகள் நடத்த அனுமதி அளிக்கப்படுவதுபோல், மதரஸாக்களுக்கான பொது தேர்வுகளை நடத்தவும் அனுமதி அளிக்க வேண்டும் என்று தலைவர்கள் கோரிக்கை வைத்தனர். அதை உடனே பரிசீலிப்பதாக முதல்வர் உறுதி அளித்தார்.

அதேபோல், ஜக்காத், சதகத்துல் ஃபித்ர் உள்ளிட்ட தானதர்மங்கள் தேவைப்படுவோர் அங்கும் இங்கும் தேடிச் செல்வதை தவிர்த்து, அந்த தொகைகளை அவரவர் வீடுகளில் ஒப்படைக்க ஏற்பாடு செய்யுமாறு முதல்வர் கேட்டுக்கொண்டார். அதற்கு தலைவர் சம்மதம் தெரிவித்தனர்.

கேரள முதல்வரின் இந்த அணுகுமுறையும், அவர் அளித்த வாக்குறுதியும் தலைவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Corona Updat’s குறித்து, தினந்தோறும் மாலை 6 முதல் 7 மணி வரை அவர் நடத்திவந்த பத்திரிகையாளர் சந்திப்பை, திடீரென – மாலை 5 முதல் 6 மணி வரை நடைபெறும் என்று அறிவித்தார். இது குறித்து நிருபர்கள் கேட்டபோது, ரமலான் மாதம் தொடங்கிவிட்டது. 6 to 7 – இப்தார் நேரம். அது அவர்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது. எனவே இந்த நேர மாற்றம் என்றார்.

மதவாதிகளுக்கு அடிமையாகாத முதல்வர் இப்படித்தானே இருப்பார்

Related Articles

Back to top button