கிருஷ்ணகிரியில் தனியார் மருத்துவமனையில் பூச்சிமருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றவர் 10 நாட்களுக்கு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கிருஷ்ணகிரியில் தனியார் மருத்துவமனையில் பூச்சிமருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றவர் 10 நாட்களுக்கு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
5 லட்சத்துக்கு மேல் பணம் பறித்து கொண்டு ஏமாற்றியதாக உறவினர்கள் மருத்துவமனை மீது தாக்குதல்
கிருஷ்ணகிரியில் டி.சி.ஆர். மல்டிஸ்பெஷாலிட்டி என்ற தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை பாம்பு கடி மற்றும் தற்கொலைக்கு முயன்றவர்களை காப்பாற்றுவதில் சிறந்து விளங்குகிறது. இந்த நிலையில் கடந்த 11ம் தேதி கிருஷ்ணகிரி அடுத்த திம்மாபுரம் பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவர் குடும்ப பிரச்சினை காரணமாக பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இவரை இந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் ஜெயராமனும் சிகிச்சை பெற்று வந்துள்ளார். 10 நாட்கள் சிகிச்சை பெற்று தீவிர குணமடைந்ததை அடுத்து நேற்று அவரை எந்தவித நிபந்தனையின்றி 5 லட்ச ரூபாய்க்கு மேல் மருத்துவ கட்டணம் செலுத்தி ஜெயராமனை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் வீட்டிற்கு செல்வதற்குள் மீண்டும் மூச்சு திணறல் ஏற்படவே உடனடியாக மீண்டும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை இல்லாமல் இன்று காலை இறந்து விட்டார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு அங்கிருந்த பொருட்களை அடித்து உதைத்தனர். மேலும் அங்கு 100க்கும் மேற்பட்ட உறவினர்கள் ஒன்று கூடியதால் பதட்டம் நிலவியது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த கிருஷ்ணகிரி திமுக எம்.எல்.ஏ. செங்குட்டுவன் அதே பகுதியை சேர்ந்த கட்சிகாரர்களை அழைத்து பேசி மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒரு குறிப்பிட்ட தொகையை இறந்தவரின் பெற்றோர்களுக்கு கொடுக்காமல் பெற்று கொண்டு இறந்த உடலை அனுப்பி வந்தனர்.
பணத்தை பெற்று கொண்ட எம்.எல்.ஏ., சிட்டாக பறந்து விட்டார்.
ஆனால் பையன் என்ன ஆனான் என்று கூட எதுவுமே தெரியாமல் பெற்றோர்கள் போலீசாரின் காலை பிடித்து கதறி அழுவதும், சாலையில் உருண்டு பிரண்டு அழுவதும் காண்போரை கண்கலங்க வைத்தது.
அதுமட்டுமின்றி அங்கு மதிமுகம் தொலைக்காட்சி நிருபராக இருக்கும் மேகராஜ் அவர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒரு கணிசமான தொகையை வாங்கிக் கொண்டு சென்றுள்ளதாக கூறுகின்றனர்.