பொதுவான செய்திகள்

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூரில் சட்டவிரோதமாக விற்பதற்காக காரில் கடத்திச் சென்ற ரூபாய் 36,000/- மதிப்புள்ள 300 மதுபாட்டில்கள் பறிமுதல் ஒருவர் கைது.

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூரில் சட்டவிரோதமாக விற்பதற்காக காரில் கடத்திச் சென்ற ரூபாய் 36,000/- மதிப்புள்ள 300 மதுபாட்டில்கள் பறிமுதல் ஒருவர் கைது.

20.05.2020 அன்று காலை 11.00 மணிக்கு தூத்துக்குடி மதுவிலக்கு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் குமார் அவர்கள் தலைமையில் ஸ்ரீவைகுண்டம் துணை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், ஆழ்வார்திருநகரி காவல் ஆய்வாளர் ஜீன் குமார், குரும்பூர் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய காவல்துறை தனிப்படையினர் குரும்பூர் பஜார் திருச்செந்தூர் பஸ் ஸடாப் அருகே வாகன தணிக்கை செய்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த TN 49 H 4411 என்ற அம்பாஸிடர் காரை நிறுத்தி சோதனை செய்ததில், காரின் பின்புறத்தில் ரூபாய் 36,000/- மதிப்புள்ள சீமென்ஸ் பிரைடு பிராந்தி (180 மிலி) 235 பாட்டில்கள், டைமண்ட் XXX ரம் 65 பாட்டில்கள் மொத்தம் 300 பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
குரும்பூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்படி 300 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து, காரிலிருந்த குரும்பூரில் வசிக்கும் மேலாத்தூரைச் சேர்ந்த ஜெயக்கொடி நாடார் மகன் கலைச்செல்வன் (38) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் கொற்கை ஊரில் உள்ள அரசு மதுபானக் கடையில் வாங்கி அதிக விலைக்கு விற்பதற்காக கொண்டு செல்வதாக கலைச்செல்வன் தெரிவித்தார். காரை ஓட்டி வந்த கீழகல்லாம்பாறையைச் சேர்ந்த குருசாமி மகன் முத்துச்செல்வம் (50) என்பவர் காரிலிருந்து இறங்கி தெற்கு நோக்கி ஓடி தலைமறைவாகிவிட்டார்.
கைது செய்யப்பட்ட கலைச்செல்வனுக்கு மாவட்ட குற்றப்பிரிவு, குரும்பூர், நாசரேத், தூத்துக்குடி மதுவிலக்கு, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் கோவில் ஆகிய காவல் நிலையங்களில் சுமார் 17 வழக்குகள் உள்ளன

Related Articles

Back to top button