புதுச்சேரியில் சமூக இடைவெளியை கடைபிடித்து பேருந்துகளை இயக்க அனுமதி.

புதுச்சேரியில் சமூக இடைவெளியை கடைபிடித்து பேருந்துகளை இயக்க அனுமதி. புதுச்சேரியில் நாளை முதல் உள்ளூர் பேருந்துகள் இயக்கம். புதுச்சேரிக்குள் தனிமனித இடைவெளியுடன் உள்ளூர் பேருந்துகள் இயக்கப்படும்.

Advertisement

ஆட்டோக்களில் இருவர் மட்டுமே செல்ல வேண்டும். காரில் மொத்தமாக 4பேரும், புதுச்சேரிக்குள் டெக்சிக்கள் 4பேருடன் இயக்க அனுமதி.

புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கும்-அங்கிருந்து புதுச்சேரிக்கும் பேருந்துகள் இயக்க தமிழக அரசுடன் பேசி முடிவு. வழியில் எங்கேயும் நிறுத்தாமல் நேரடியாக செல்ல நடவடிக்கை.

அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகள், ஆலைகள், காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். ஹோட்டல்கள் இரவு 7மணி வரை நீட்டிப்பு. பார்சலுக்கு மட்டுமே அனுமதி.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மதுக்கடைகள் நாளையில் இருந்து காலை 7முதல் மாலை 7மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மது வாங்க வருபவர்கள் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர் வரை கலந்து கொள்ள அனுமதி. துக்க நிகழ்ச்சிகளில் 20 பேர் பங்கேற்கலாம்.

மத்திய அரசு அறிவித்த பொதுமுடக்கம் புதுச்சேரியில் மே 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். 31ஆம் தேதி வரை பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.

பெரிய மார்க்கெட்டை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பெரிய மார்க்கெட்டில் உள்ள மீன் அங்கடி திறக்க முடிவு. படிப்படியாக தளர்வுகளை கொடுத்து வருகிறோம்.

தொழிற்சாலைகள் மற்றும் கடைகளில் 50% தொழிலாளர்கள் வைத்து இயக்கப்படுகிறது. மக்களின் சகஜ வாழ்க்கைக்கு திரும்புகிறானர்

  • புதுவை முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி

Show More
Back to top button