மதுபோதையில் கணவர் கொலை கொடூரம் உறவினர் கைது

மதுபோதையில் கணவர் கொலை: கொடூர மனைவி, உறவினர் கைது!!!செட்டிபாளையம்:செட்டிபாளையம் அருகே கணவரை, கல்லால் தாக்கி கொலை செய்த மனைவி, உறவினருடன் கைது செய்யப்பட்டார்.போத்தனூரை அடுத்த செட்டிபாளையம் அருகேயுள்ள பெரியகுயிலியில் வசித்து வந்தவர் அண்ணாமலை, 38. இவரது மனைவி பிரியா, 28. இருவருக்கும் மது பழக்கம் உள்ளது.கடந்த, 17ல் இருவரும் மது குடித்துள்ளனர். வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கைகளால் கணவரை தாக்கிய பிரியா, கல்லால் தலையில் தாக்கியுள்ளார். அண்ணாமலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.அப்போது அங்கு வந்த, பிரியாவின் சகோதரி கணவர் செல்வராஜ் உதவியுடன் அண்ணாமலையின் சடலத்தை, ஆம்புலன்ஸ் வாகனத்தில் சொந்த ஊரான சங்ககிரி, பெருச்சாளி நத்தம் கிராமத்துக்கு கொண்டு சென்றார்.சந்தேகமடைந்த உறவினர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.பிரியாவும், செல்வராஜூம் அங்கிருந்து தப்பினர்.உள்ளூர் போலீசார், கோவை எஸ்.பி., அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். எஸ்.பி., சுஜித்குமார் உத்தரவில், தனிப்படை போலீசார் சங்ககிரி சென்றனர். பிரியா, செல்வராஜ் இருவரையும் கைது செய்து. கோவைக்கு அழைத்து வந்தனர்.விசாரணைக்குப் பின், மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Advertisement
Show More
Back to top button