பொதுவான செய்திகள்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் எம்ஜி ரமேஷ் தலைமையில் 10000 நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் 144 தடை உத்தரவு காலத்தில் வேலை இழந்து வறுமையில் வாடும் உடலுழைப்பு தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட தொழிலாளிகளுக்கு பத்தாயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் திரு எம் ஜி ரமேஷ் தலைமையில் சமூக இடைவெளியை பின்பற்றி மாஸ்க் அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இந்த ஆர்ப்பாட்டம் பெரியகுளம் அறிஞர் அண்ணா சிலை அருகிலும் அதனைத் தொடர்ந்து தென்கரை காந்திசிலை அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் தேனி மாவட்ட செயலாளர் காசி விஸ்வநாதன் நகர பொறுப்பாளர் பூமிநாதன் ரங்கநாதபுரம் கிளைச் செயலாளர் ராமன் பொம்மிநாயக்கன்பட்டி கிளைச் செயலாளர் பாருக் ஆகியோர்கள் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினார்கள் …

Related Articles

Back to top button