பொதுவான செய்திகள்

பத்தாம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு மனு

பத்தாம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு மனு

கொரோனாை வைரஸ் தொற்று தற்போது தமிழகத்தில் அதிகமாக பரவி வரும் சூழலில் ஜூன் ஒன்றாம் தேதி முதல் தொடங்க இருக்கிற பத்தாம் வகுப்பு தேர்வுகளை தள்ளிவைக்க தமிழக அரசுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க புதுடெல்லியில் உள்ள தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு ஈமெயில் மூலம் மனு அனுப்பியுள்ளது. இது சம்பந்தமாக மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் டாக்டர் ராம. சேயோன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 12.05. 2020 தேதியன்று அன்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஜூன் 1ஆம் தேதி தொடங்கி 12-ம் தேதி வரை நடைபெறும் என அறிவித்துள்ளார். மொத்தம் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கக் கூடிய தேர்வாகும்.
மேலும் அரசு தரப்பில் தேர்வு நடக்கும் பொழுது பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அந்தப் பேருந்துகள் மாணவர்களை அழைத்து வரவும், மாணவர்கள் தேர்வு எழுதும் இடத்தில் சமூக இடைவெளிவிட்டு, மாணவர்கள் மாஸ்க் அணிந்து தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பானது பொதுமக்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் தேர்வு நடத்துவது என்பது தேர்வு நடத்துவது என்பதும் அங்கு தேர்வு மையங்களை அமைப்பதும் சமூக இடைவெளி கடைப்பிடிப்பதும் மிகவும் கடினமான ஒன்றாகும்.
சமூக இடைவெளியை கடைப்பிடித்து பத்தாம் வகுப்பு தேர்வு நடத்தப்படுவது என்பது ஒரு கடினமான செயலாகும்.
மொத்தம் 3825 தேர்வு மையங்களில் தேர்வு நடத்த உள்ள சூழ்நிலையில் அந்த தேர்வு மையங்கள் எல்லாம் பாதுகாப்பான மையங்களாக வைத்திருப்பது சிரமம் என்றும்,
மேலும் மன ரீதியாக மாணவர்கள் ஜூன் மாதத்தில் தேர்வு எழுத தயாராக இல்லை என்றும், அவர்கள் ஜூலை மாதத்தில் தேர்வு தொடங்கும் என்ற எண்ணத்திலேயே இருப்பதாலும், மேலும் ஜூன் மாதத்தில் தேர்வு நடத்தினால் பெரும்பாலான பெற்றோர்கள் வைரஸ் தொற்று பரவுவதால் தேர்வுக்கு அனுப்ப மாட்டார்கள் எனவும் மேலும் தற்போது வைரஸ் பரவுதல் சற்று அதிகமாக உள்ளதால் தமிழக பள்ளிக்கல்வித்துறை பத்தாம் வகுப்பு தேர்வுகளை ஜூன் ஒன்றாம் தேதி அன்று தொடங்காமல் ஜூலை மாத கடைசியில் அல்லது ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் நடத்த வேண்டுமென்றும், தேர்வுகள் எல்லாம் வைரஸ் பரவுதல் முழுமையாக நீக்கப்பட்டு, சகஜ நிலைக்கு தமிழகம் வந்த பிறகு தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும் ,ஆகையால் மாணவர்கள் நலன் கருதி தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தமிழக அரசுக்கு உரிய உத்தரவு பிறப்பித்து உடனடியாக பத்தாம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்க உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Articles

Back to top button