கொரோனா ஊரடாங்கால் நாடு திரும்பமுடியாமல் துபாய் நாட்டில் சிக்கி நோய்வாய்ப்பட்டு உயிருக்கு போராடும்

கொரோனா ஊரடாங்கால் நாடு திரும்பமுடியாமல் துபாய் நாட்டில் சிக்கி நோய்வாய்ப்பட்டு உயிருக்கு போராடும் தேனிமாவட்டம் போடியை சேர்ந்த பொறியாளர் கணேஸ்குமாரை மீட்க மத்திய மாநில அரசுகளுக்கு பெற்றோர்கள் கோரிக்கை

Advertisement

தேனிமாவட்டம் போடியைசேர்ந்தவர் செல்வம். இவரது மகன் கணேஷ்குமார் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு கடந்த ஜனவரி மாதம் வேலைக்காக துபாய் நாட்டிற்கு சென்றார். அதன்பிறகு இரண்டு மாதங்களில் உலகெங்கும் உயிர்பலி வாங்கிவரும் கொரோனா தொற்றால் மார்ச் மாதம் 24 ஆம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதால் விமான சேவைகள் ரத்தானது. இதனால் கணேஷ்குமார் நாடு திரும்பமுடியவில்லை. இதனால் கடந்த இரண்டு மாதங்களாக வேலையின்றியும் வருமானமின்றியும் உணவின்றியும் கிடைத்த சுகாதாரமற்ற உணவை சாப்பிட்டு வந்ததால் மஞ்சள்காமாலை நோயும் குடல் புற்றுநோயும் கணேஷ்குமாருக்கு ஏற்பட்டது. உரிய மருத்துவசிகிச்சையும் பெற முடியாததால் உடல்நிலை மிகவும் மோசமானதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிருக்குப்போராடும் தனது சிரமத்தை வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த கணேஷ்குமாரின் தந்தை செல்வம் மற்றும் தாயார் கலாராணி மற்றும் அவரது உறவினர்கள் மத்திய மாநில அரசுகள் கணேஷ்குமாரை மீட்டு இந்தியா அழைத்துவரக்கோரி இன்று தேனி மாவட்டஆட்சியர் மரியம்பல்லவிபல்தேவிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். பொறியியல் படிப்பை படிக்கவைத்து வெளிநாட்டிற்கு கனவுகளுடன் தங்களது மகனை வேலைக்கு அனுப்பிய பெற்றோர் அங்கு உயிருக்கு போராடுவதை அறிந்து செய்வதறியாமல் அழுது புலம்புவது தேனிமாவட்டத்தில் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Show More
Back to top button