தேனி மாவட்டம் ஆண்டிபட்டியருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது- இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல்.
ஆண்டிபட்டியருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது- இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல்.
Advertisement
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியருகே உள்ள வருசநாடு- பஞ்சந்தாங்கி ஓடைப்பகுதியில் வைத்து கஞ்சா விற்பனை செய்து வருவதாக கடமலைக்குண்டு காவல்துறையினருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறையினர் வருசநாடு பகுதியில் தீவிரமாக ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது வருசநாடு அருகே வைகைநகர் பஞ்சந்தாங்கி ஓடைப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் மறைந்திருந்த வாலிபரை சுற்றிவளைத்தது பிடித்து சோதனையிட்டதில் அவர் வைகைநகர் கிராமத்தை சேர்ந்த கணேசன்-22 என்பதும் கஞ்சாவிற்பனை செய்துவருவதும் தெரியவந்தது. இதையடுத்து கணேசனை கைதுசெய்து அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ஆண்டிபட்டியருகே கஞ்சாவிற்பனை செய்தவர் பிடிபட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .