இந்தியன்-2 இரண்டு பாகமாக உருவாகிறது

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் படம் இந்தியன் 2. இதில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் பலியாகினர். இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பின்னர் ஊரடங்கு காரணமாக தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இந்த படத்தின் 20 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது

Advertisement

அந்த காட்சிகளை சமீபத்தில் போட்டு பார்த்தபோது 3 மணி நேரத்துக்கு மேல் படம் ஓடுகிறதாம். வெறும் 20 சதவீத காட்சிகளே இவ்வளவு நேரம் ஓடுவதை பார்த்து படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. இதனால் படத்தை இரண்டு பாகமாக உருவாக்கலாம் என்று சிலர் யோசனை தெரிவித்துள்ளார்களாம். இதற்கிடையே படம் கைவிடப்பட்டதாக தகவல் பரவியது. இதை தயாரிப்பு தரப்பில் மறுத்துள்ளனர்.

Show More
Back to top button