சொந்த ஊர் செல்லும் தொழிலாளர்களுக்கு பிரகாஷ்ராஜ் உதவி

தனது பணியாளர்களுக்கு மே மாதம் வரை சம்பளம் கொடுத்து விடுமுறை அளித்த பிரகாஷ்ராஜ், தனது பண்ணை வீட்டில் கூலிப் பணியாளர்களை தங்க வைத்தார். அவர்கள் குடும்பத்துக்கு பண உதவி செய்தார். நலிந்த குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கினார். தற்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான போட்டோக்கள், வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. நடந்து செல்பவர்களுக்கு பிரகாஷ்ராஜ் உணவு, தண்ணீர் போன்றவற்றை  வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.

Advertisement

இந்த போட்டோக்களை பகிர்ந்துள்ள பிரகாஷ்ராஜ் கூறுகையில், “நான் பிச்சை எடுத்தாலும் சரி, கடன் வாங்கினாலும் சரி, என்னை தாண்டி நடந்து செல்லும் சக குடிமகன்களுக்கு தொடர்ந்து பணத்தை பகிர்ந்து கொடுப்பேன். அதை அவர்கள் எனக்கு திருப்பி கொடுக்காமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் கடைசியாக தங்கள் வீட்டை அடையும்போது, “எங்கள் வீட்டை அடைய நம்பிக்கையும், வலிமையும் கொடுத்த ஒரு மனிதனை சந்தித்தோம்” என்று சொல்வார்கள். அவர்கள் வாழ்வுக்கு மீண்டும் உயிர் கொடுப்போம்” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Show More
Back to top button