தமிழ்நாடு

புழல் சிறை கைதி சாவு

புழல்: சென்னை வண்ணாரப்பேட்டை, போஜராஜன் நகர், பென்சில் பேக்டரி பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம் (எ) கனகராஜ் (84). இவர், ராயபுரம் பகுதியில் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த 2012ம் ஆண்டு முதல் புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார்.
வயது முதிர்வு காரணமாக சோமசுந்தரத்துக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் உடல் நிலை மிகவும் மோசமானதால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் உயிரிழந்தார்.

Related Articles

Back to top button