தமிழ்நாடு

கொரோனா சோதனைக்காக தனிமைப்படுத்திய வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

போடி: கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, வெளிமாநிலங்களிலிருந்து தேனி மாவட்டத்திற்கு வருபவர்களை போடி, தேவாரம் சாலையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் தனிமைப்படுத்தி வருகின்றனர். இந்தக் கல்லூரியில் 158 பேரை அறைக்கு 2 பேர் வீதம் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரத்தை சேர்ந்த 20 வயது வாலிபர் மகாராஷ்டிராவில் வேலை பார்த்து வந்தார். இவர், கடந்த 15ம் தேதி முதல் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். நேற்று மாலை அறையில் தனியாக இருந்த அவர் வேட்டியால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அங்கிருந்தவர்கள், ‘‘எங்களை வெளியில் விடுங்கள்’’ என்று போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்தனர்

Related Articles

Back to top button