CoronaVirusஇந்தியா

கர்ப்பிணி மனைவிக்காக சாலையில் கிடந்த கட்டைகளை வைத்து தள்ளுவண்டி செய்து 700 கி.மீ இழுத்துச்சென்ற புலம்பெயர்ந்த தொழிலாளி! – மனதை உருக்கும் வீடியோ!

#MigrantWorker | #Hyderabad

மனைவி மற்றும் கைக்குழந்தையை தள்ளுவண்டியில் வைத்து இழுத்துச்சென்றுள்ளார் புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவர்.

[embedyt]https://youtu.be/vUxx4MCIr0k[/embedyt]
கர்ப்பிணி மனைவியால் நீண்ட தூரம் நடக்கமுடியாது என்ற காரணத்திற்காக, சாலையில் கிடந்த கட்டைகளை வைத்து தள்ளுவண்டி செய்து 700 கி.மீ இழுத்துச்சென்றுள்ளார் புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவர்.

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பல ஏழை தொழிலாளர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அதிலும் குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. போக்குவரத்து வசதிகள் இல்லாததால் அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்ல மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.



சில தொழிலாளர்கள், சைக்கிளிலோ அல்லது நடந்தோ சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். இதுஒருபுறம் இருக்க, மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த நபர் 700 கிமீ நடந்தே சென்ற சம்பவம் மக்கள் மனதை உருக்கும் விதமாக உள்ளது. மத்தியப்பிரதேசத்தை சேர்ந்தவர் ராமு. அவர் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஹைதராபாத்தில் வசித்து வேலை செய்துவருகிறார். ஊரடங்கு காரணமாக அவருக்கு வேலை இல்லாததால், கர்ப்பிணி மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.


ஆனால், உரிய போக்குவரத்து வசதி கிடைக்காததால் நடந்தே செல்ல முடிவெடுத்த அவர், தன் குடும்பத்துடன் சிறிது தூரம் நடந்து சென்றுள்ளார். அவரது மனைவியால் நெடுந்தொலைவு நடக்கமுடியாது என்பதை உணர்ந்து, சாலைகளின் ஓரத்தில் கீழே கிடக்கும் கட்டைகள் மற்றும் குச்சிகளை வைத்து தள்ளுவணி ஒன்றை உருவாக்கி அதில் கர்ப்பிணி மனைவியையும் குழந்தையையும் அமரவைத்து சுமார் 700 கி.மீ இழுத்துச்சென்றுள்ளார்.

மகாராஷ்டிரா வழியாக அவரது சொந்த ஊரை அடைந்த ராமுவிற்கு அப்பகுதி போலீசார் உடனே மருத்துவ உதவி மற்றும் உணவுகளை வழங்கினர். ராமு அவரது குடும்பத்தை தள்ளுவண்டியில் இழுத்துச்செல்லும் வீடியோ இணையதளத்தில் பகிரப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button