இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் V.P ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தூத்துக்குடி மாவட்ட காவல்கண்
காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக
இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் V.P ஜெயக்குமார் மீது நடவடிக்கை வேண்டி தூத்துக்குடி மாவட்ட காவல்கண்
காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார்…..
➖➖➖➖➖➖➖➖

Advertisement

அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது

தூத்துக்குடி பிரையன்ட் நகர் முதல் நகரிலுள்ளபள்ளிவாசலில் நோன்பு கஞ்சி விநியோகிக்கப்படுவதாகவும், CAA, போராட்டங்களுக்கு ஆதரவு திரட்டப்படுகிறது என்றும்,

தூத்துக்குடி ஜெயராணி தெரு, தெற்கு புதுத்தெரு, மீ.கா தெருக்களில் 40க்கும் மேற்பட்ட வெளிநாட்டு இஸ்லாமியர்கள் இருப்பதாகவும், மாவட்ட ஆட்சியரிடம் இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் V.P ஜெயக்குமார் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து அரசு அதிகாரிகள் மற்றும் தாசில்தார் அவர்களும் முறையாக விசாரித்து மேற்கண்ட எந்த விதமான குற்றச்சாட்டு சம்பவங்களும் நடக்கவில்லை என்று கூறியுள்ளனர்.

ஆனால் அரசு அதிகாரிகள் மறுப்பு கொடுத்தும்,மத துவேசத்தை பரப்பும் வகையில் VP ஜெயக்குமார் முகநூலில் மேற்கண்டவற்றை பரப்பி வருகிறார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களும்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களும், அரசு நிர்வாகம் சிறப்பாக செயல்படக்கூடிய வேலையில் இத்தகைய தவறான கருத்தை பரப்பி வருகிறார்.

எனவே உண்மைக்கு புறம்பாகவும், மேலும் மத துவேஷத்தை தூண்டும் வகையில் வெறுப்பு பிரச்சாரத்தை முகநூலில் பரப்பும் V.P ஜெயக்குமார் மீது சட்ட ரீதியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டி இன்று 1-05-2020 வெள்ளிக்கிழமை தூத்துக்குடி மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக தூத்துக்குடிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அவர்களிடமும் புகார் அளிக்கப்பட்டது.

இச்சந்திப்பில் பாப்புலர் ஃப்ரண்ட் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சம்சு மரைக்காயர், SDPI கட்சி மாவட்ட செயலாளர் வழக்க றிஞர் அஜீஸ், தொகுதி துணைத் தலைவர் முஹைதீன், பாப்புலர் ஃப்ரண்ட் காதர் ஹூஸைன், செல்வ விநாயகர் புரம் ஜமாத் நிர்வாகி பீர் முஹம்மது ஆகியோர் உடனிருந்தனர்.


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தூத்துக்குடி மாவட்டம்
01-05-2020

Show More
Back to top button