தமிழ்நாடு

ஆம்பூர் அருகே நண்பர்களுடன் மரத்தில் நுங்கு பறிக்கச் சென்ற பொறியியல் கல்லூரி மாணவன் மரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழப்பு

ஆம்பூர் அருகே நண்பர்களுடன் மரத்தில் நுங்கு பறிக்கச் சென்ற பொறியியல் கல்லூரி மாணவன் மரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அரங்கல் துருகம் பகுதியை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவன் புதியவன் என்பவர் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார் விடுமுறையில் வீட்டிற்கு வந்த புதியவன் கோடை வெயிலின் தாக்கத்தினை போக்கும் பன நுங்கை பறிக்க நண்பர்களுடன் அங்குள்ள கானற்று பகுதிக்கு சென்றுள்ளார் அப்போது பனைமரத்தில் ஏறிய புதியவன் நுங்கை பறித்து கொண்டிருந்த போது திடீரென தவறிக் கீழே விழுந்துள்ளார் இதில் பலத்த காயமடைந்த அவரை நண்பர்கள் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த போது வரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார் இதுகுறித்து தகவலறிந்து வந்த உமராபாத் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து அவருடன் சென்ற நண்பர்களுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பணை பறிக்க சென்று மரத்திலிருந்து தவறி விழுந்து பொறியியல் கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Related Articles

Back to top button