மசாஜ் சென்டர் பெயரில் மஜாவாக விபச்சார தொழில் செய்த பாமக முக்கிய நிர்வாகி.. அதிர்ச்சியில் தலைமை.!

0
1255

மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் செய்து வந்த பாமக மாநில இளைஞரணித் துணைத்தலைவர் மாரிச்செல்வம் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.


மதுரை காமராஜர் சாலையில் ப்ளூமிங் டே ஸ்பா என்ற பெயரில் மசாஜ் சென்டர் கடந்த 2 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. ஆனால், அங்கு மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, மாறுவேடத்தில் வாடிக்கையாளர் போல் சென்று ஆய்வு செய்து உறுதி செய்தனர். அப்போது மேற்கு வங்கம், கர்நாடகாவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் மற்றும் மதுரை, திண்டுக்கலைச் சேர்ந்த 3 பெண்கள் என மொத்தம் 5 பெண்களை மீட்டனர். 

ஸ்பா ஊழியராக இருந்த மதுரை மேலமாசி வீதியைச் சேர்ந்த சதீஷ் (35) மற்றும் ஷாலினி (24) ஆகியோரை கைது செய்தனர். மேலும், மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த பாமக மாநில இளைஞரணி துணைத்தலைவர் மாரிச்செல்வம் மற்றும்  மனித உரிமை அமைப்பு ஒன்றின் தலைவர் ஆகியோர் உரிமையாளர் எனவும் கூறப்படுகிறது.இவர்கள் இடைத்தரகர்கள் மூலம் வெளி மாநிலங்களில் இருந்து பெண்களை வரவழைத்து பாலியல் தொழிலில் ஈடுபட வைத்ததாகவும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, தலைமறைவாக உள்ள பாமக நிர்வாகி மற்றும அவரது கூட்டாளிகள் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்ட மதுரையைச் சேர்ந்த பாமக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் மாரிச்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.