பப்ஜி மதன் கைது, போலீசார் காலில் விழுந்து அழுத மதன்

0
478

ஆன்லைன் விளையாட்டு யூடியூப் சேனலில் ஆபாசமாகப் பேசி வீடியோ வெளியிட்டது தொடர்பான புகாரில் பப்ஜி மதனை காவல்துறையினர் தொடர்ந்து தேடிவந்த நிலையில், தலைமறைவான அவரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

 

தர்மபுரியில் ஒருவீட்டில் பப்ஜி மதன் தங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்த நிலையில், சைபர் க்ரைம் தனிப்படை போலீசார் அங்கு சென்று மதனை கைது செய்து, சென்னை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர். போலீசில் சிக்கிய உடன், ‘நான் செய்தது தவறு’ என போலீசார் காலில் விழுந்து மதன் அழுது  கெஞ்சியதாகவும், அவர் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

கைது செய்யப்பட்ட மதன் மீது இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 509, 294 பி உள்ளிட்ட 4 பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்பட்டதால் முன்ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளில் மதன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட செல்ஃபோன், லேப்டாப் ஆகியவைகளை கொண்டு மதனுக்கு உதவிய அவரது தோழிகளை பிடிக்கவும் போலீசார் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

 

ஏற்கனவே இந்தப் புகார் தொடர்பாக மதனின் மனைவியும் பெற்றோர்களும் விசாரணை வளையத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.