கீழே கிடந்து எடுத்த மொபைல் போனை காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஜமீருக்கு பொன்னாடை போற்றி காவல்துறை பாராட்டு

0
472

கீழே கிடந்து எடுத்த மொபைல் போனை காவல்நிலையத்தில் ஒப்படைத்த நபருக்கு பொன்னாடை போற்றி காவல்துறை பாராட்டு.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மார்க்கெட் பகுதியில் தவறவிட்ட விலை உயர்ந்த மொபைல் போனை கண்டெடுத்த கடையநல்லூர் வடக்கு அய்யாபுரம் தெருவைச் சேர்ந்த ஜமீர் என்பவர் காவல் நிலையத்தில் மொபைல் போனை ஒப்படைத்தார். அப்பொழுது மொபைல் போனை தவறவிட்ட பெண் கடையநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்ய வந்தார். அதே நேரத்தில் கீழே கிடந்த மொபைல் போன் காவல் நிலையத்தில் ஒப்படைக்க ஜமீனும் வந்தார் இரு நபர்களும் ஒரே நேரத்தில் வந்ததால் உடனடியாக உரியவரிடம் மொபைல்போன் ஒப்படைக்கப்பட்டது காமன் போன மொபைல் பெற்றுக்கொண்ட நபர் ஜமீனுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார். அதன் பின்னர் ஜமீனின் நேர்மையை பாராட்டி கடையநல்லூர் காவல் ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் உதவி ஆய்வாளர் விஜயகுமார் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர் .