CoronaVirusதமிழ்நாடு

இஸ்லாமியர்களின் மீது வெறுப்பு பிரச்சாரத்தை தொடர்ந்து பரப்பும் சிதம்பரத்தை சேர்ந்த நபர் மீது சிதம்பரம் காவல் துணை கண்காணிப்பாளரிடம் SDPI கட்சி புகார்

இஸ்லாமியர்களின் மீது வெறுப்பு பிரச்சாரத்தை தொடர்ந்து பரப்பும் சிதம்பரத்தை சேர்ந்த நபர் மீது சிதம்பரம் காவல் துணை கண்காணிப்பாளரிடம் SDPI கட்சி புகார்.

சிதம்பரத்தில் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து இஸ்லாமியர்களின் மீது தவறான வதந்திகளை பரப்பி இரு சமூகத்தார்கள் இடையே பிளவை ஏற்படுத்தும் விதமாக தொடர்ந்து அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபடும் நபரின் மீது சிதம்பரம் காவல் துணை கண்காணிப்பாளர் #திருகார்த்திகேயன் அவர்களிடம் #SDPIகட்சியின்கடலூர்மாவட்டதலைவர்திருஹமீதுஃப்ரோஜ் அவர்கள் இன்று (23/04/2020) புகார் அளித்தார்.இதை போன்று தொடர்ந்து விஷம பிரச்சாரத்தில் ஈடுபடும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கொரோனா வைரசை விட கொடூரமானவர்கள் எனவே அவர்கள் மீது கடுமையான சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின் போது SDPI கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முகமது அலி, சிதம்பரம் நகர செயலாளர் துபைல், நகர துணை தலைவர் அப்துல் கபூர் மற்றும் சகோதரர் உசேன் ஆகியோர் உடன் இருந்தனர்.

தகவல்

SDPI கட்சி
கடலூர் மாவட்டம்

Related Articles

Back to top button