“இஸ்லாமியர்கள், கரோனா பரிசோதனை மேற்கொண்ட பிறகே மருத்துவமனைக்கு வரவேண்டும்!” – சர்ச்சையில் சிக்கிய தனியார் மருத்துவமனை!

டெல்லியில் தப்லிக் நடத்திய மாநாட்டிற்கு பிறகுதான் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் விளம்பரம் கொடுக்கப்பட்டது. பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது..!

உத்தரப்பிரதேசத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்று, இஸ்லாமியர்கள், கரோனா பரிசோதனை மேற்கொண்ட பிறகே மருத்துவமனைக்கு வரவேண்டும் என்று விளம்பரம் கொடுத்துள்ள சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் மீரட் பகுதியில் உள்ள வேலண்டைஸ் கேன்சர் மருத்துவமனை நிர்வாகம், கடந்த சில தினங்களுக்கு முன்னர் பத்திரிகையில் விளம்பரம் ஒன்றை கொடுத்திருந்தது. அதில், தப்லிக் டெல்லியில் நடத்திய மாநாட்டிற்கு பிறகுதான் இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று அதிகமாகிவிட்டதாகவும், தங்களது மருத்துவமனைக்கு வரும் இஸ்லாமிய நோயாளிகள் கரோனா பரிசோதனை மேற்கொண்ட பிறகே வரவேண்டும் எனவும் அப்படி அவசர சிகிச்சைக்காக வந்தால் 4500 ரூபாய் செலுத்திவிட்டு தங்களிடம் ரத்த மாதிரியை கொடுக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

பாசிச வாதிகள் அவதூறு பரப்பியதால் இந்த நிலமைக்கு தள்ளப்பட்டிருகிறோம்

பத்திரிகை விளம்பரம்


பத்திரிகையில் கொடுக்கப்பட்ட விளம்பரம்

அந்த விளம்பரம் குறிப்பிட்ட சமூகத்தவரை கொச்சைப்படுத்தும்விதமாக பலர் கருத்து தெரிவித்ததை அடுத்து, அடுத்த நாள் கொடுத்த விளம்பரத்தில் மருத்துவமனை நிர்வாகம் மன்னிப்பு கோரியிருந்தது. 

தற்போது, அந்த மருத்துவமனையின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மத உணர்வுகளை தூண்டும் வகையில் செயல்பட்டதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த பகுதியில் வசிக்கும் பத்திரிகையாளர் ஒருவர் கூறுகையில், FIR பதிவு செய்யும்வரை எந்த பத்திரிகையும் அந்த விளம்பரத்தை பிரசுரிக்கமாட்டோம் என்று எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று வேதனை தெரிவித்தார்.

இந்த மருத்துவமனை மீது எடுக்கும் நடவடிக்கையை பார்த்து வேரு எந்த மருத்துவமனையும் இது போல் சொல்ல நினைத்து பார்க்க கூடாது என்றும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் மற்றும் பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

Show More
Back to top button