CoronaVirusஇந்தியாதமிழ்நாடு

மடிந்து விட்டதா மனிதாபிமானம்- ஈரோட்டில் காய்ச்சலால் உயிரிழந்த மாற்றுத்திறனாளி சிறுவனின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு

கொரோனா தொற்று ஏதுமில்லை..!

ஈரோடு மாவட்டத்தில் நம்பியூரை சார்ந்த முகம்மது பிலால் (மாற்றுத்திறனாளி)
மருத்துவமனையில் உடல்நிலை சுகமில்லாமல் இறந்து விட்டார்..!

கொரோனா நோயால் தான் இறந்து விட்டதாக விஷமத்தனத்தை பரப்பி அந்த பகுதியை சார்ந்த அப்பாவி மக்களை ஏவி விட்டுள்ளனர்..!

கொரோனா நோய் ஏதும் இல்லாமல் மருத்துவமனையில் மரணித்த மாற்றுத்திறனாளியின் உடலை வீட்டிற்க்கு எடுத்து செல்லும் வழியில் ஆம்புலன்ஸை செல்ல விடாமல் வழி மறித்தும், அடக்கம் செய்ய விடாமலும், அராஜகம் செய்துள்ளனர் மனிதாபிமானம் இல்லாத மக்கள்..!

நள்ளிரவு 1 மணி வரை அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். செவிடன் காதில் ஊதிய சங்கு போல் கேட்காமல் இருந்துள்ளனர்..! இதனை தொடர்ந்து வாலிபரின் உடலை கோபி செட்டிப்பாளையத்தில் உள்ள மயானத்திற்கு எடுத்து சென்றனர். அங்கு உடல் அடக்கம் செய்யப்பட்டது.

கொரோனா நோயால் தான் இறந்து விட்டதாக விஷமத்தனத்தை பரப்பி அந்த பகுதியை சார்ந்த அப்பாவி மக்களை ஏவி விட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்..

Related Articles

Back to top button